search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி உரை"

    பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.

    இதேபோல் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.



    இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

    பிப்ரவரி 13-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், மக்களைக் கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் கடைசியாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    ×